கோவை விளாங்குறிச்சியில் குடிநீர் தொட்டி இருக்கும் இடத்தில் இருந்து பாம்புகள் வருவதாக பொதுமக்கள் புகார்

குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வசிப்பதற்கு அச்சமாக உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 32-வது வார்டு விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து விடுவதாகவும், இதனால் இப்பகுதியில் வசிப்பதற்கே அச்சமாக உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் இப்பகுதியில் குழந்தைகள் விளையாடவே முடியாத சூழல் நிலவுவதாகவும், நடந்து செல்லவே பயமாக இருப்பதாகவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறினர்.

தண்ணீர் தொட்டி இருக்கின்ற இடத்தை மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களோ அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமென இன்று ஜூன்.22 கோரிக்கை விடுத்தனர். சுத்தம் செய்தால் மட்டுமே பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகள் இருக்கின்ற பகுதிகளுக்கு வராமல் இருக்கும் என தெரிவித்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...