பொள்ளாச்சியில் விவசாயிகள் கள் இறக்கும் பிரச்னையில் போலீசார் துன்புறுத்துவதாக புகார்

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் துன்புறுத்துதல் குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 38 பேர் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தது தமிழகம் எங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்தஆனைமலை, கோட்டூர், உள்ளிட்ட பகுதியில் சில விவசாயிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் போலீசார் விவசாயிகளிடம் கள் இறக்குவதை நிறுத்த வேண்டும் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



ஒரு சில விவசாயிகளை தீவிரவாதியை போல விசாரணை நடத்தியதாக புகார் தெரிவித்த விவசாயிகள் சிலர் பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு கள் இறக்கி விற்பனை செய்வதாகவும் பூரண மதுவிலக்கு தேவை எனில் மதுபான கடைகளை மூடிவிட்டு எங்களிடம் அரசு கேட்கட்டும். மாநில அரசிடம் தவறை வைத்துகொண்டு விவசாயிகளை வஞ்சிப்பது நியமல்ல எனவும். இனி போலீசார் கள் இறக்கும் விவசாயிகளை தொந்தரவு செய்தல் பொள்ளாச்சி காந்திசிலை முன்பு கள் இறக்கி விற்பனை செய்யும் முடிவை எடுக்க நேரிடும் என்று போலீசாருக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...