டி.சி. தர ரூ.1½ லட்சம் கேட்கும் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகம் - பாதிக்கப்பட்ட மாணவன் கோவை ஆட்சியரிடம் புகார்

கோவில்பாளையத்தில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகம், டி.சி. வேண்டுமென்றால் ரூ.1½ லட்சம் தர வேண்டும் என்று கேட்பதாக பாதிக்கப்பட்ட வைஷ்ணவ் மாணவர் கோவை ஆட்சியரிடம் தந்தையுடன் சென்று மனு அளித்துள்ளார்.



கோவை: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவ். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் (SNS) பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் சக மாணவர்களான யாசின், ஹபின், ரிசில், லிதின் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான வைஷ்ணவ் தொடர்ந்து கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாற்று சான்றிதழ் வழங்குமாறு கேட்டதாகவும், மீதம் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான 1,27,000 ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாக தெதிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாற்று சான்றிதழ் பெற சென்றபோது கல்லூரியின் முதல்வர் மற்றும் டீன் தனியாக அழைத்து சென்று வரும் கல்வி ஆண்டுகளுக்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்க முடியும் எனவும், இது தொடர்பாக போர்டு மீட்டிங் பின்னரே முடிவு செய்ய முடியும் எனவும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெற்றோருடன் விசாரணைக்கு பின் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகம், டீன் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கபட்ட மாணவன் வைஷ்ணவ், தந்தையுடன் இன்று ஜூன்.19 மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...