மாநகராட்சி பணிகள் குறித்து கோவை மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 17-வது வார்டுக்குட்பட்ட ஓணாப்பாளையம், வடவள்ளி பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, வடவள்ளி பகுதியில் பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி, பொன் நகர் பகுதியில் உள்ள ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா, வடவள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி மயாண இடம் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, 18-வது வார்டுக்குட்பட்ட வீரகேரளம், ரவீஸ் அவென்யூ பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சிப் பொது ஒதுக்கீட்டு இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதையும், ஐஓபி காலனியிலிருந்து மருதமலை பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் இணைப்புப் பாலத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.



இதைத்தொடர்ந்து, வடவள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது, துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...