9-வது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.200 கோடி உற்பத்தி பாதிப்பு

ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி 9 வது நாளாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலை பெற்று கூலி அடிப்படையில், அதனை துணியாக நெசவுசெய்து கொடுத்துவருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலி தொகையை வழங்க வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 2-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 9-வது நாளாக நடைபெற்று வரும் இப்போராட்டம் காரணமாக, 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன் நாள் ஒன்றுக்கு 22 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 13-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...