ஆர்.கே. நகரில் திமுக வெற்றி பெறக்கூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோவையில் பேட்டி


திமுக காங்கிரஸோடு இணைந்து பெரிய அளவுக்கு தேசிய அளவில் ஊழல் செய்திருப்பதால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடுங்கள், திமுக-வுக்கு மட்டும் ஓட்டுப்போடாதீர்கள் என்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தருண் விஜய் தென்னியந்தியர்களைப் பற்றி பேசியது வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத்தை படித்து பேசியது ஆகும், நிறத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஜீன் அளவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை அனைவருக்கும் ஒரே ஜீன் தான். மேலும், தருண் விஜய் அந்த புத்தகத்தை தெளிவாக படிக்க வேண்டும்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் தன்னிடம் குறை ஒன்றையும் சொல்லவில்லை. அவர்களின் போராட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. முல்லைபெரியாறு விவசாயிகள் வேண்டுகோள் கொடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தேன். பாராளுமன்றத்தில் நாற்பது எம்பி-க்கள் விவசாய அமைச்சரையும், பிரதம மந்திரியையும் சந்திக்க வேண்டும்.

சசிகலாவை அடுத்து யார் ஜெயிலுக்குப் போவார்கள் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, சோனியா காந்தி, பா.சிதம்பரம், அவரது மனைவி, கார்த்தி மற்றும் கனிமொழி, ராஜா ஆகியோர் ஜெயிலுக்கு போவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் என ஹெச்.ராஜா பேசவில்லை என்பதை தன்னிடம் கூறினார். நான் பொருக்கி என்று சொல்லாததை சொன்னதாக கூறியவர்கள் நிருபிக்க வேண்டும் என சாவல்விட்டும் யாரும் நிரூபிக்கவில்லை. 

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் தேர்தல் நிறுத்தப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. மேலும் வருமான வருத்துறை சோதனைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் நடவடிக்கை.

ஜம்மூ காஸ்மீரில் மட்டுமில்லாமல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியிலும், கேரளாவிலும் உள்ளனர். இதை ஒடுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஒரு கூட்டுப்படையை உருவாக்கினால் மட்டுமே இந்த அமைப்பை அழிக்க முடியும் என்றார்.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...