வெள்ளலூர் குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூர் செல்வசிந்தாமணி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு முழுவதுமாக சீரமைத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, இன்று ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.



இதுகுறித்து, இக்களப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் கூறுகையில், இன்றைய ஞாயிறு எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. நாங்கள் கோவையில் பல குளங்களை சீரமைத்து வருகிறோம். இன்று கோவையின் பழமைவாய்ந்த வெள்ளலூர் குளத்தினை தூர்வாரி ஒரு லாரி முழுக்க கழிவுகளை அகற்றியுள்ளோம். இவை அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் கழிவுகள். மாநகராட்சி நிர்வாகமும் எங்களுக்கு உதவி வருகிறது. கோவை மாநகராட்சி ஊழியர்கள் 20 பேரும் மற்றும் 3 லாரிகள் இன்று எங்களுக்கு உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய களப்பணியில் மேலும் பலர் புதிதாக வந்து சேவையாற்றியுள்ளனர்' என்றார். 

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.மணிகண்டன் இதுகுறித்து கூறுகையில், கோவையில் வரலாற்று சிறப்புமிக்க குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம். இக்குளத்தினை சமீபகாலமாக சரிவர பராமரிக்காததால் தற்போது பயனற்று கிடக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள், குடியிருப்புக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களால் வெள்ளலூர் குளம் சிதலமடைந்துள்ளது.



இதனை தூர்வாரும் பணியில் இன்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து ஏராளமான கழிவுப் பொருட்களை அகற்றியுள்ளோம். மேலும், இக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்கால்கள் முழுவதும் கழிவுப் பொருட்களால் அடைபட்டுள்ளது. குளத்தில் 3 முதல் 4 அடி ஆளம் வரை பிளாஸ்டிக் மற்றும் வீட்டுக் கழிவுகளே உள்ளன. அதனை முழுவதுமாக அகற்றி வருகிறோம். இதனை அகற்றினால் மட்டுமே இனி வரும் மழைக்காலத்தில் நீர் முழுவதுமாக சேமிக்கப்படும்.



மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் கொட்டுவதை நிறுத்தினால் மட்டுமே முழுமையாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்' என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...