கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம், பலத்த காற்றுக்குப் பின், சாய்ந்து விழுந்தது.



Coimbatore: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் வீசிய காற்றின் காரணமாக சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அரச மரத்தின் அடியில் இளைப்பாறுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.15) மாலை காற்று வீசியபோது சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. சாலையில் குறுக்கே விழுந்தது. 

அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சரத்தை துண்டித்தனர். பின்னர் விரைந்து வந்து வருவாய் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். 

ஊர் மக்களின் அடையாளமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...