தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்

தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு துணைவேந்தர் கீதாலட்சுமி பரிசுகளை வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், உலக தாவர நல தின நாளினை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கடந்த 12.05.2024 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இத்தினத்தன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து, தாவர நலத்தின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக எதிர்கால வேளாண்மையில் நாம் எதிர்நோக்கி உள்ள பல்வேறு சவால்களான காலநிலை மாறுபாடு, புதிய பூச்சி மற்றும் நோய்கள், பாதுகாப்பான வர்த்தகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நம் தொழில்நுட்ப உத்திகளை அதற்கு ஏறாற்போல் உருவாக்க வேண்டியது நமது கடமையாகும் என்று எடுத்துரைத்தார்.

முன்னதாக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மூ.சாந்தி, தினத்தினுடைய சிறப்பு மற்றும் நோக்கம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். தேர்வு கண்காணிப்பாளர் முனைவர் வெ.யாலசுப்ரமணி, தாவர நலம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு அவற்றை சிறந்த முறையில் பேணிக்காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக துணைவேந்தர் தாவர நலம், பாதுகாப்பான வர்த்தகம் மற்றும் கணினி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தலைப்புகளில் நடைபெற்ற சிறந்த புகைப்படம், சிறந்த ஓவியம் மற்றும் சிறந்த கட்டுரை எழுதிய பயிர் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த முதுநிலை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வலைதள பயிலரங்கம் நடந்தன. அதில் முனைவர் B.M. பிரசன்னா தாவர நலம் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். முனைவர் T.சோனை ராஜன் பாதுகாப்பான மற்றும் சரியான அளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வினை மாணவரிடம் எடுத்துரைத்தார். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் Y.G.பிரசாத் அவர்கள் பேசுகையில் பருத்தியில் மேம்படுத்தப்பட்ட கணினி வகை தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து முனைவர் ஆலிஸ் சுஜிதா பேசுகையில் தாவரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மா.முருகன் வரவேற்புரை ஆற்றினார். பயிர் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் K.அங்கப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



இந்நிகழ்ச்சியில் சுமார் 450க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...