நெடுஞ்சாலைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணியடித்து போராட்டம்

தமிழக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி சாவு மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுங்கி இருப்பதாகவும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம்பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும், சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருத வேண்டும். சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...