லங்கா கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோவை மாநகர் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் மனு

டாஸ்மாக் கடையை அகற்ற கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு சென்னையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்டது இல்லாமல், மேலும் 3 நபர்களை மது பாட்டில்களால் தாக்கி உள்ளனர். காயம் அடைந்த பொது மக்களை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால் தினசரி பிரச்சனை ஏற்பட்டு வருவதாலும், பொதுமக்கள் நிம்மதியாக அப்பகுதியில் வசிக்க முடியவில்லை என்றும், கடைகள் நடத்த முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



இது குறித்து பலமுறை கோவை மாவட்ட ஆட்சியரிடமும், காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கும் மேற்கொள்ளவில்லை என்றும், மீண்டும் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.

கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். லங்கா கார்னர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் உயிர் பலிகள் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாகவும் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...