கோவை மத்தியசிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி..!

கோவை மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகள் கல்வி மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை மத்தியசிறையில் தற்போது சுமார் 2300 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான யோகா, கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 கல்வியாண்டில் 12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தண்டனை சிறைவாசிகள் சுப்புராஜ், மன்சூர் அகமது மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை பெற்று தலைசிறந்த தேர்வு முடிவுகளை பதிவு செய்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ம். செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறியுள்ளார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...