பெரியநாயக்கன்பாளையத்தில் நீர்குட்டையில் தவறிவிழுந்த பெண் யானையை மீட்க வனத்துறையினர் தீவிரம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் உள்ளது.



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், சற்று பெரிய யானை உள்ளதாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வருவதாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் நிலவிவருகிறது.

தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியிலேயே முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...