செங்கல் சூளை தொழிலை மீண்டும் கொண்டுவர முயற்சி - சின்னதடாகத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு

மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.


கோவை: கோவை சின்னதடாகம், சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய பகுதியில் அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை உங்கள் ஊர்க்காரன்.



நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன். ஒவ்வொரு ஊருக்கென்று ஒவ்வொரு தொழில் உண்டு. அதேபோல் இந்த பகுதியில் செங்கல் சூளை தான் முக்கியத்து தொழிலாக இருந்தது அதனை அழிய விடக்கூடாது. அது தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது.

எனவே மீண்டும் கொண்டுவர முயற்சி எடுப்பேன். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி போட்டு எங்களுக்கு வயிற்று வலி வந்து விட்டதாக கூறினார். பால் விலை, கரண்ட் பில், தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி என எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டனர். 3 ஆண்டடுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை, 10 ஆண்டுகளில் மோடி இருந்தும் 10 பைசாவிற்கு பிரயோஜ்ஜனம் இல்லை கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரின் வீட்டிற்கும் 1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்து வெரும் மஞ்சள் கயிறோடு இருக்கின்றீர்கள். இவ்வாறு வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...