தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, கடந்த 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், சில தனியார் மற்றும் பொது அமைப்புகள் நடத்தக்கூடிய உள்ளரங்கு கூட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெறவேண்டும்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கப்பதற்காக தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று, அது தொடர்பாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்ட பின்னரே ஒட்டப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற விவரத்தினை மூன்று நாட்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் அனுமதி பெறாமல் ஒட்டினால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகவே பார்க்கப்படும் என்பதோடு தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...