டாஸ்மாக் கடைகளுக்கு பதில் கள்ளுக்கடையை திறப்போம் - ஆனைகட்டி பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம்

செங்கல் சூளை விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு குழந்தையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டுவதுபோல் உள்ளது. இவர்களே பிரச்சனையே ஆரம்பித்துவிட்டு, வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் இன்று (ஏப்ரல்.2) பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம்.



மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம். வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும். மலைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார். இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும். செங்கல் சூளை விவகாரதில் திமுக குழந்தையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டி விடுவார்கள். இவர்களே பிரச்சனையே ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள்.

மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் பகுதி. ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம். அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான்.

மோடி தான் பழங்குடியை சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர். மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான். இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்றவை எல்லாம் லோக்கல் வண்டிகள். டெல்லிக்கு போகும் ஒரே வண்டி நான் இருக்கும் இந்த வண்டி தான்.

டாஸ்மாக்கை இங்கிருந்து எடுக்க வேண்டும். ஒரு டாஸ்மாக்கை எடுப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, எல்லா டாஸ்மாக்கை எடுக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா நானும் தான் குடிப்பேன் என என்பார்கள். நான் கூறுவது எல்லாம் டாஸ்மாக்கில் இருப்பவை spirit-கள், அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம். குடி என்பது கிராமத்திற்குள் வந்து, பின்னர் வீட்டிற்குள் வந்து பெண்களுக்கு மன உளைச்சலாக உள்ளது. அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...