ஓய்வூதியர்களுக்கு இணையதளம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்று

தமிழ்நாடு அரசு கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30க்குள் கருவூலத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது தங்களது உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வருடம் முதல் கூடுதல் வசதியாக ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் உயிர்வாழ் சான்றினை பெற்று கருவூல இணையதளத்தில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜீவன் பிரமான் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் கருவூலத்தில் அளிப்பதற்கான நடைமுறைகள்:-

1. தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

2. ஆதார் எண், ஓய்வூதிய கொடுவை எண், ஓய்வூதியம் அனுப்பும் அலுவலக விவரம் உள்ளிட்டவற்றை அரசு இ-சேவை மையத்தில் அளிக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக அனுப்பப்படுகின்ற உயிர்வாழ் சான்றுகள் உரிய கருவூலத்தில் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் சரிபார்த்து பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

ஜீவன் பிரமான் இணையதளத்தில் உயிர்வாழ் சான்றினை, ஓய்வூதியர்களுக்கு உரிய வசதிகள் இருப்பின் தனிப்பட்ட முறையிலும், மின்னணு உயிர்வாழ் சான்றினை ஜீவன் பிரமான மூலமாக அளிக்கலாம். அவை கருவூலத்தில் சரிபார்க்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...