நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு ஆதரவு – திருப்பூரில் பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் விளக்கமளித்துள்ளார்.


திருப்பூர்: அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் கர்ணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெயரில் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் பொறுப்பாளர் கதிரவன் எடுத்த முடிவு தன்னிச்சையான முடிவு என்றும், ஆனால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், கதிரவனின் முடிவு என்பது தன்னிச்சையான முடிவு. அது ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் முடிவு அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் ஓரிரு நாட்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு சீட்டு கேட்டு பெறப்போவதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அரசு 68 ஜாதினருக்கு எதிராக பத்து புள்ளி ஐந்து சதவீதம் கொண்டு வந்தது. அதனால் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வரை சந்திக்கும் பொழுது டிஎன்பி என்ற ஒற்றைச் சான்று முறையை கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செயலாளரும் மாநில பொருளாளருமான சுரேஷ் பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முக்குலத்தோர் சமுதாயம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்வு என்பது முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே ஆறாத காயமாக உள்ளதாகவும் ஆகையால் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை அனைத்து மாவட்ட செயலாளர் அவர்கள் மாநில பொறுப்பாளர்கள் ஒற்றைக் கருத்துடன் ஆதரித்து உள்ளதாகவும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் மாநில பொருளாளருமான சுரேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...