கோவையில் கனிம வளங்களை அனுமதியின்றி எடுத்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பேரூா் வட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூா், வெள்ளிமலைப்பட்டிணம், விராலியூா், தேவராயபுரம், வெள்ளருக்காம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலையடிவாரங்களில் கிராவல் மண், செம்மண் அனுமதியின்றி வெட்டி எடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.

கனிம வளங்களை முறையற்ற வகையில் வெட்டி எடுப்பதைத் தடுக்க வட்ட அளவில் ‘டாஸ்க் போலீஸ்’ ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா், வனத் துறையினா், கனிம வளத் துறையினா், பொதுப் பணித் துறையினா் உள்ளனா்.

தேவராயபுரத்தில் 3,121 க.மீ. மண் அனுமதியின்றி வெட்டி எடுத்த நில உரிமையாளா் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள புவியியல், சுரங்கத் துறை துணை இயக்குநா் ரமேஷ், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதனுக்கு மார்ச் 1 -ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் அனுமதியின்றி மண் எடுத்ததற்காக 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 59 வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் மண், கல் எடுத்ததற்காக கனிம வளத் துறையினா் அறிக்கையின்பேரில், நில உரிமையாளா்கள் மீது பொள்ளாச்சி சார் ஆட்சியரால் ரூ.34.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதித்த அளவுக்கு கூடுதலாக மண் எடுத்துச் சென்றதாக 190 வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராவல் மண், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை அனுமதியின்றி வெட்டி எடுப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...