கோவையில் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி- கோவை TNAU அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக ஆய்வு செய்ய தங்களது தென்னை தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள் என்று வேளாண்மை பல்கலைக்கழம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நேற்று (பிப்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில் தென்னையில் தற்போது காணப்படும் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி நாளை (மார்ச்.1) முதல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக தங்களது தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கவும். மேலும் தங்கள் புகைப்படம், பண்ணை வரைபடம், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஒரு நகலுடன் தயாராக இருக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...