ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு சம்பத்திற்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என சட்டக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொருத்தப்பட்டு அதிகளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகளை கண்டறிந்து வட்டா போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பதோடு அந்த ஏர் ஹாரன்களை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கியதோடு, ஏர் ஹாரன் அடித்ததில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் கூடலூர் நகராட்சியில் பணியாற்றி வந்த அசோக்குமார் மற்றும் அவரது 3 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை சட்டக்கல்லூரி 4 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு சம்பத்திற்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...