திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் ஆதியோகி ரத யாத்திரை – மக்கள் உற்சாக வரவேற்பு

திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால் ஆகிய இடங்களில் மார்ச் 8 ஆம் தேதி ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி: மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது.



மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருநெல்வேலியில் இன்று (16-02-2024) நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான பிரேம் பங்கேற்று பேசுகையில், "கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம் ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன.

ரதம் பயணிக்கின்ற ஊர்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது.

அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகா தேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் அனைத்து இடங்களிலும் பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...