பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்கிறார் - சின்னியம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு முன்னதாக தொழில் அமைப்புகளுடன் கலந்து ஆலோசிக்கும் கூட்டமானது நடைபெற்றது.



நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபிக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை ஓபிஎஸ் செய்து வருகிறார். திருடனுக்குப் பிறகு ஓபிஎஸ் பிஜேபியில் இணைந்து விடுவார். பிஜேபியுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். அதிமுகவைப் பொறுத்தவரையில் பெரிய கூட்டணி மகத்தான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் பிஜேபி இல்லாத கூட்டணி தான் அமையும். பிஜேபி தவிர்த்து யாரு வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். அதிமுக யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை யாருக்காகவும் தட்ட வேண்டிய சூழலும் இல்லை. அதிமுகவை நோக்கி தான் கட்சிகள் வரும்.

திமுக சார்பாக தேர்தல் அறிக்கைக்காக கனிமொழி தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறார். ஒரு நான்கு செவுத்துக்குள் இருந்து கொண்டு மனுக்களை பெற்று வருகிறார். அதிமுகவை போன்று ஆடிட்டோரியங்களில் மனுக்களை வாங்க தற்போது திமுகவும் செய்து வருகிறது. மக்கள் எங்களுடன் மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களைத் தடுத்து வருகின்றனர். 17 வருடங்களாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இதுவரை என்ன தமிழகத்துக்கு செய்தது அதிமுக மாநில உரிமைக்காக பாடுபட்டது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. திமுக எல்லை தாண்டி மீன்பிடித்தது தொடர்பாக குறைவான சம்பவங்களே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது.

அதிமுகவை கண்டால் இலங்கை அரசிற்கு பயம் அப்போது இருந்தது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியதற்கு மக்களை பாதிக்கின்ற எந்த சட்டமாக இருந்தாலும் அதிமுக எதிர்க்கும். சிறுபான்மையின மக்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் அதை அதிமுக எதிர்க்கும். பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டுள்ள இந்தியாவை பதில் சிவில் சட்டத்தை அனுமதிக்க முடியாது.

அண்ணாமலை பொறுத்த மட்டில் பல கருத்துகளை கூறி மாட்டிக் கொண்டு வருகிறார். அவரின் கருத்துக்கள் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பல் குறித்து கூற வேண்டாம் என நினைக்கிறேன். படாமல் என சொல்லியது எப்படி சென்று கொண்டிருக்கிறது. அதுபோல அதைக் கூறுபவர்களும் லேகியம் இருப்பவரை போலத்தான் இருப்பார்கள். அதிமுகவைப் பொறுத்த மட்டில் திமுகவின் பகையாளி பாஜகவும் பகையாளி அதிமுகவை எதிர்க்கும் போது என தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...