உடுமலை அருகே பூளவாடி சாலையில் கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாய கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதில் பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். அவரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி சாலையில் ஆத்துக்கிணத்துபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சிவராஜ் என்ற விவசாயி தோட்டத்து கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகின்றது.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கிணற்றில் விழுந்த கார் மற்றும் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...