கோவையில் உள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா

உலகத்தரத்தில் மாணவர்களுக்கு மொழித்திறன் அவசியம் தேவைப்படுகிறது என்றும், கல்வி கற்றலில் முக்கியத்துவம் மற்றும் அவசியம் வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீ V. முரளிதரன் பட்டமளிப்பு விழாவில் கூறினார்.


கோவை: இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா 19-01-2024 அன்று மதியம் 1-00 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது.



பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் ஸ்ரீ V. முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.



அவர் தனது உரையில், உலகத்தரத்தில் மாணவர்களுக்கு மொழித்திறன் அவசியம் தேவைப்படுகிறது என்றும், கல்வி கற்றலில் முக்கியத்துவம் மற்றும் அவசியம் வேண்டும் என்பதனைக் கூறினார். இந்தியாவின் தகவல் தொடர்பு சார்ந்தவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி நிலையில் சிறப்புற அமைந்துள்ளது. இந்தியா உலகத்தரத்தில் முன்னனியில் விளங்கிறது. தொழில் முனைவோர் உருவாக்குவதற்கும், அதனை அறிந்து கொள்ளுவதற்கும், அதன் பயன்கள் பற்றி விளக்கிக் கூறினார்.

இந்தியாவில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் சிறந்தவையாக காணப்படுகிறது என்றும், உலகளவில் இருக்கும் திருகுறளின் மேன்மையின் தனித்தன்மையையும் விளக்கினார். காசி தமிழ்ச்சங்கம் பற்றியும், சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கம் பற்றியும் கூறி, தமிழ்மொழியின் சிறப்பை தெளிவாக எடுத்துரைத்தார்.

கோயமுத்தூர் வளர்ச்சி நிலைகளையும், அதன் சிறப்பலயும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களைக் கூறி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளித்து, கௌரவித்தார்.



இப்பட்டமளிப்பு விழாவில் 750-க்கு மேற்பட்ட இளங்கலையில் 2021-22 ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவியர்களும் மற்றும் 150ற்கும் மேற்பட்ட முதுகலையில் 2021-2022 ஆம் ஆண்டு தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்கள்.

மேலும், விழாவில் இரத்தினம் கல்விக் குழுமத்தலைவர் முனைவர் மதன் ஆ. செந்தில் அவர்கள் விழாவினை தலைமையேற்றுத் உரையாற்றினார். இரத்தினம் கல்விக் குழும இயக்குநர் ஷிமா செந்தில் அவர்கள், கல்லூரிச் செயலாளர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான முனைவர் ஆர்.மாணிக்கம் அவர்கள், துணைத்தலைவர் முனைவர் B. நாகராஜ் அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

துணைமுதல்வர் முனைவர் S.N சுரேஷ் அவர்கள், ஆய்வுத்துறை புல முதன்மையர் முனைவர் K.PV பிரிஷ் அவர்கள், வணிகவியல்த்துறை புல முதன்மைார் முனைவர் TM ஹேமலதா, மாணவர் புல முதன்மையர் சற்குருநாதன். பலதுரைர் உதவிப்பேராசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினைத் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் S.தினகரன் அவர்கள் மற்றும் அவரது குழுவினர்கள் சிறப்பாகச் செய்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...