சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி வரும் 10ம் தேதி போராட்டம் - திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடுகள் குறித்து கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சரியான நேரத்தில் அறிவிப்பார் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சிகள் மற்றும் இயக்கங்களில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில செயலாளர் ஜாபர் அலி முன்னிலையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்துக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட செயலாளராக ராயல் ராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜாபர் அலி,



இன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிமுன் அன்சாரியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து இருப்பதாகவும், வருகின்ற 28ஆம் தேதி பழனி பாபா நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மனித நேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொள்ள இருப்பதாகவும், அவ்விழா ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கும் விழாவாக அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும், தமிழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை கிணற்றில் போட்ட கல் போல நிறைவேற்றாமல் இருப்பதாகவும், உடனடியாக பாதிக்கப்பட்டு வருபவர்களின் குரலாய் மனிதநேய ஜனநாயக கட்சி நடத்துகின்ற இந்த போராட்டத்திற்கு செவி சாய்த்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...