ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

முறையான மாதாந்திர ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சத்துணவு ஊழியர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூபாய் 3 லட்சம் வழங்கிட மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறித்தி ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து, தமிழக அரசு தங்களை தொடர்ந்து புறக்கணிக்குமானால் காபந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் சத்துணவு ஊழியர்கள் செயல்படுவார்கள் என எச்சரித்தார். மேலும் 2 நாட்களாக ஏழை குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் போராட்டம் நடத்தி வரும் தங்களின்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்ததால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...