சாலை விபத்தில் இரு வாலிபர்கள் பலி

கோவை குனியமுத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜாபர் (20) மற்றும் அசாருதீன் (20). இவர்கள் இருவரும்  கரும்புக்கடை பகுதியில் பாரம் தூக்கும் பணி செய்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு பணி முடிந்து ஆத்துப்பாலம் வழியாக, ஜாபர் தனது வாகனத்தில் அசாருதீனை அழைத்துக் கொண்டு செல்லும்போது, சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது தூக்கியெறியப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போக்குவரத்து புலனாய்வு துறை (மேற்கு) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வாலிபர்களின் உடலையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...