கடந்த 29ம் தேதி வெளியான வட்டார வழக்கு திரைப்படம் பற்றி கோவையில் படக்குழுவினர் பேட்டி

மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னணியில் இருப்பதால், இசைஞானியை அணுகியதாக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்று கூறினார்.


கோவை: எந்த எதிர் பார்ப்புகளும் இல்லாமல் தனது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார் என வட்டார வழக்கு திரைப்பட இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்.



மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில்,நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், நடிகை ரவீனா ரவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள வெளியான வட்டார வழக்கு படம் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன், இது 1985-ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட படம். இதில், யாரும் செருப்பு அணிந்திடாத ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னணியில் இருப்பதால், இசைஞானியை அணுகியதாக குறிப்பிட்ட அவர், இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார். அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம் என்று கூறிய அவர், என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாத போதும். அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகழ்ச்சி பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகை ரவீனா ரவி பின்னணி குரல்கள் நிறைய பலபேசி இருந்தாலும், இந்த படத்தில் கிராமத்து பேச்சு வழக்கை தாம் கொஞ்சம் சிரமபட்டே பேசியதாக தெரிவித்தார். சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான் என்றாலும், இது போன்ற கிராமத்து பின்னணி படங்களுக்கு அதுவே பெரிய அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...