புத்தாண்டை வரவேற்க கோவையில் வானில் வண்ண கோலமிட்டு வர்ணஜாலம் செய்த லேசர் லைட் ஷோ

புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. பின்னர், 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் அனைவரும் ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.


கோவை: உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது.



பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஒளிர விடப்பட்டன.



வானில் வண்ணங்களை தீட்டி வர்ணஜாலம் செய்த லேசர் ஷோ, அங்கிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.



அத்தோடு மட்டுமின்றி புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகளை வடிவமைத்து, 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததனை அறிவித்து, பொதுமக்களை குஷி படுத்தினர்.



வாலாங்குளத்தில் குளக்கரையில் குழுமியிருந்த பொதுமக்கள், ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர். கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் தற்பொழுது கொரோனா பரவல் இருக்கின்ற நிலையில், நடப்பாண்டில் இவை அனைத்தும் இல்லாமல் பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டுமென பலர் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர்.

நாட்டின் வளர்ச்சியில், இந்த ஆண்டு பெரும் பங்காற்ற வேண்டும் என பலரும் தெரிவித்தனர். பெண்கள், ஆண்கள் என பலர், இந்த வருடம் என்ன ரெசல்யூஷன் என்பதையும், சுவாரசியுடன் தெரிவித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...