தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயிலும் மாற்று திறனாளி மாணவர்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக நான்கு வருட கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.PC.துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி அவர்கள் வழங்கினர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்று திறனாளிமாணவர்களுக்கு சக்தி மசாலா நிறுவனம் தனது சக்திதேவி அறக்கட்டளையின் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் 27.12.2023 அன்று நடைபெற்றது.

முனைவர் N.வெங்கடேசபழனிச்சாமி, முதன்மையர் (வேளாண்மை) அவர்கள் தனது வரவேற்பு உரையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கிவரும் ஒருங்கிணைப்பு கல்வி உதவித்தொகைமையமானது பொருளாதாரரீதியில் பின்தங்கிய மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்து வருவதாக கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி அவர்கள் விழாவினை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் சக்தி மசாலா நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தோடு இணைந்து மாணவர்களுக்கான பல நலத்திட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்த திட்டங்களின் மூலம் மாற்றுதிறனாளி மாணவர்கள் மற்றும் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் எழுத முனைப்புள்ள மாணவர்கள் ஆகியோர் மிகவும் பயனடைவார்கள் என்று கூறினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் R. தமிழ்வேந்தன் அவர்கள் முன்னோடி தொழிற்நிறுவனமாகிய சக்தி மசாலா தனது அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்வது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும் எனவும், இந்நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பயனடைகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்து பயிலும் மாற்று திறனாளி மாணவர்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் (cutoff mark) தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக நான்கு வருட கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் முனைவர்.PC.துரைசாமி மற்றும் முனைவர் சாந்தி துரைசாமி அவர்கள் வழங்கினர்.

மேலும், சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் தனது சிறப்புரையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி சிறந்த வேளாண் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் மற்றும் விவசாயத்தின் தரத்தை உலக நாடுகளுக்கு சமமாக எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



சக்தி தேவி அறக்கட்டளையின் இயக்குனர் முனைவர். சாந்திதுரைசாமி அவர்கள் தனது சிறப்புரையில் பெண்கள் முதலில் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். ஆறாம் வகுப்பே படித்திருந்த நான் பின்னர் என் கணவரது உறுதுணையாலும், ஊக்குவிப்பாலும் அவர் படித்த கல்லூரியிலேயே படித்து பல பட்டங்கள் பெற்றுள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக பல சமூக உதவிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செய்து வருகிறேன் என்றால் "அது நம்மால் முடியும்"என்ற தன்னம்பிக்கையினால்தான் என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.



நிகழ்ச்சியின் இறுதியில் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை ஒருங்கிணைப்பு அதிகாரி முனைவர். P.G.கவிதா தனது நன்றியுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருங்கிணைப்பு கல்வி உதவித்தொகைமையத்தின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளை சேர்ந்த 82 மாணவர்கள் அரசாங்க கல்வி உதவித்தொகை நீங்கலாக, பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலமாக உதவித்தொகை பெற்றுப் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.



மாற்று திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய சக்தி மசாலா நிறுவனத்திற்கும் மற்றும் ஊன்றுகோலாக இருந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் நன்றி கூறினார்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...