ஆவாரம்பாளையம் சாலையில் தார்சாலை அமைக்கும் பணி - நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 28, ஆவாரம்பாளையம் சாலையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்(TURIP 2023-2024) ரூ 27. 97 லட்சம் மதிப்பீட்டில் 640 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை , நேற்று நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தீடீர் ஆய்வு செய்தார்.



அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.



அப்போது, மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி பொறியாளர் முருகேசன், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி பொறியாளர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...