கோவையில் முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி - தமிழக அரசு பாதுகாக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

முட்டைகோசை நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், தோட்டக்கலை மூலமாக அதிக விலை சரிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ஐம்பதாயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: முட்டைகோஸ் விவசாயம் தொடர்ந்து நலிவடைந்து வரும் நிலையில் முட்டைக்கோசை விளைவித்த விவசாயிகள் கடும் விலை சரிவை சந்தித்து வருவதாகவும் எனவே முட்டைக்கோஸ் விளைவிக்கும் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், குப்பனூர்,மாதம்பட்டி கரடிமடை தென்கரை தேவராயபுரம், தாழியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முட்டை கோசை சாகுபடி செய்து வருவதாகவும், இந்நிலையில் பருவநிலை மாற்றங்களால் இதனை உரிய நேரத்தில் பயிரிட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 18,000 நாற்றுக்கள் நட்டு வரும் நிலையில் புழுக்கள், பூஞ்சன நோய் வனவிலங்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் இந்த விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து ஆறு மாத காலங்களுக்கும் மேலாக இதன் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



எனவே இந்த விவசாயத்தை பாதுகாப்பதற்கு தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து இதனை நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், தோட்டக்கலை மூலமாக அதிக விலை சரிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ஐம்பதாயிரம் ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய காலத்தில் ஏற்றுமதி செய்திட மாவட்ட நிர்வாக முன் வர வேண்டும் உழவர் சந்தைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து முட்டைக்கோஸ் வருவதை தவிர்த்து உள்ளூர் முட்டை கோஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விலையில்லாத காலகட்டங்களில் தோட்டக்கலை சார்பாக இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கை மனு இச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது.



மேலும் மனு அளிக்க வந்த விவசாயிகள் அவர்களது கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தியும் முட்டைகோசுகளை ஏந்தியும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



மேலும் முட்டைக்கோசுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒரு கிலோ முட்டைக்கோஸ் ஐந்து ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...