உடுமலையில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தளிரோடு வழியாக திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக பஸ், வாகன, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் குறுக்காக ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் சமயத்தில் கேட் அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சதுக்கம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளின் இரவு நேர பயணத்திற்கு ஏதுவாக பாலத்தின் இரண்டு புறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்பு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலத்தில் விளக்குகள் எரியாமல் ஒரு பகுதி இருள் சூழ்ந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பின்பு வாகன ஓட்டிகள் விரைவான பயணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் பாலத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து விட்டதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாற வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பாலத்தின் கிழக்கு பகுதி முழுவதும் விளக்குகள் எரிவதில்லை. இதை சாதகமாக கொண்டு அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

அத்துடன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் பாதை முடிவடைந்து தார் சாலை தொடங்கும் பகுதியில் ஆங்காங்கே துளை விழுந்துள்ளது. அதை சீரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாலத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மேம்பாலத்தில் பழுதடைந்த விளக்குகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பாலத்தில் ஏற்பட்டுள்ள துளைகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...