வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறை

வாழ்க்கையில்  மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுங்கள் என தனியார் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.



கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய “நம்மாலும் முடியும்” என்ற புத்தகம் விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதன் நிகழ்ச்சி கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளர் கல்லூரி தமிழ்துறை சார்பில் இன்று நடைபெற்றது.

இதில், கல்லூரி துணை முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகிக்க கல்லூரி தமிழ்துறைத் தலைவர் அருள்சீலி வரவேற்புரையாற்றினார். நூல் அறிமுக உரையை வள்ளியப்பன் பேசினார். இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பேசுகையில், இந்த புத்தகம் எழுத தூண்டுகோலாக ஜப்பான் நாட்டின் புஷிமா கலாச்சாரம் மற்றும் ஜப்பானிய மக்களின் தொழில்நுட்பம் மற்றும் வாழ்வாதார முறை தன்னை வெகுவாக கவர்ந்தது என கூறினார்.

ஜப்பானிய மக்கள் வாழ காரணம் இருந்தால் வாழலாம் அல்லது செத்துமடி என்ற கொள்கை உடையவர்கள் என தெரிவித்தவர். அந்நாட்டில் சமுதாய அக்கறையும் லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சி, கடின உழைப்பு ஆகிய காரணத்தாலேயே சிறந்த நாடாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனி திறமை உள்ளதாகவும், பயம் இருந்தாலும் செயலை செயல்படுத்துவது தான் தைரியம் என்றவர், வாழ்கையில் தடைகள் மற்றும் இடையூறுகளை தாண்டி மாணவர்கள் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த சைலேந்திரபாபு, மாணவிகளுக்கு தான் எழுதிய “நம்மாலும் முடியும்” புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...