சாலைமறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதல்

உடுமலை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதலால் கைகலப்பு ஏற்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.


திருப்பூர்: குடிநீர் கேட்டு நடந்த சாலைமறியல் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில் நேற்று இரவு அதிமுக மற்றும் பொதுமக்கள் உடுமலை சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்பொழுது திமுகவை சேர்ந்த சங்கராம பேரூராட்சி தலைவர் மல்லிகாவின் கணவர் கருப்புசாமி பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது அதிமுக திமுக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது இதில் திமுகவில் பேரூர் கழக இளைரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன் என்பவருக்கு மண்டை உடைந்தது.

அதிமுகவில் எம்ஜிஆர் இளைரணி செயலாளர் சந்தோஷ் கௌதம் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். திமுகவைச் பிரகதீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர். சந்தோஷ் கௌதம் கருப்புசாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உடுமலை அருகே குடிநீர் கேட்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அதிமுக திமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...