பொள்ளாச்சி-போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று சோதனை

பொள்ளாச்சி - போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, சோதனை ஓட்டம் இன்று (19ம் தேதி) நடப்பதால், பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: இன்று,காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

ரயில்வே தண்டவாளம் உறுதித்தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று திண்டுக்கல்-ஈரோடு ரயில், பொள்ளாச்சி - போத்தனுார் வழியாக சோதனை ஓட்டம் செல்கிறது.

இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

அதனால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம். மேலும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்திய பின், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொள்ளாச்சி - கோவை ரயிலின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...