தாராபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவி கடத்தல் - போக்சோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெங்களூரு கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மளிகை பொருட்கள் விற்பனை செய்து வந்த உரிமையாளரின் 15-வயது மகள் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மளிகை பொருட்கள் விற்பனையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த மாணவி பள்ளிக்கு அழைத்தும் செல்லும் ஆட்டோ ஓட்டுனரையும் காணவில்லை என விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாருக்கு கடந்த 20 நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனர், மாணவியுடன் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு பேரையும் தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைதது வந்து விசாரணை நடத்திய போது ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மாணவியை கடத்தி சென்றவர், தாராபுரம் சின்னகாளியம்மன் கோவில் மேற்கு கச்சேரி வீதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தவசி (23) என்பதும்,மாணவியை தினசரி ஆட்டோவில் ஏற்றி சென்று திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தநேரத்தில், குடும்ப கதையை சொல்லி மாணவியிடம் பழக்கம் ஏற்படுத்தி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக 2-மனைவிகள் பிரிந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் தவசியை தாராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...