மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்.3 கோவை பயணம்

அக்டோபர் 3 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


கோவை: கோவைக்குஅக்.3 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் வருகை தர உள்ளார்.

கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.

கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.

இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.

இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.

இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...