தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் ஆனைமலையில் முழு நிலவு சபைக் கூட்டம்

தேசிய குழந்தைத் தொழிலாளார் திட்டமும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணி இயல் துறையும் இணைந்து பொது மக்களிடம் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆனைமலை அருகில் உள்ள எட்டித்துறை கிராமத்தில் முழு நிலவு சபைக் கூட்டத்தை நடத்தினர்.



இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர் ஆசிரியை சி.சாந்தி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு ஆனைமலை ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் வி.சேதுராமன் தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆய்வாளர் எஸ்.சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.விஜயசங்கர், காளியாபுரம் முன்னாள் வார்டு கவுன்சில் டி.அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணி இயல் துறை தலைவர் பேராசிரியர் அ.அழகர்சாமி வாழ்த்துரை வழங்கினார். ஆனைமலை காவல்துறை உதவி ஆய்வாளர் ஏ.செல்வநாயகம் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசும் போது, சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் காரணமாகத்தான் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

குடும்பச் சூழலைக் காரணம் காட்டி வீட்டு வேலைகளுக்கும், தோட்ட வேலைகளுக்கும் குழந்தைகளை அனுப்பி விடுகிறார்கள். இது போன்ற சம்பவங்களை நானே நேரடியாக தலையீட்டு சம்பந்தப்பட்ட குழந்தையை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தேன் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசும் போது, குழந்தைகள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் இலவசமாக செய்து கொடுத்துள்ளது. இந்த சலுகைகளை முழுமையாக பயன்படுத்தி குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அனைவரும் கிராமத்தை தேடி வந்துள்ளார்கள் என்றால் அவர்களிடத்தில் உங்களுடைய பிரச்சனைகளை தெரிவித்து உரிய நிவாரணங்களை பெறலாம் எனக் குறிப்பிட்டார்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார் பேசும் போது, கிராமங்களில் பௌணர்மி தினங்களில் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடிப்பதும் கூட்டாக உணவு உண்பது நாட்டு நடப்புகளை குடும்ப விஷயங்களை உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக பௌணர்மி இருந்து வந்தது. காலப் போக்கில் அவை மாறி அந்த பழக்கங்கள் மறைந்து வருகிறது. பழைய கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையிலும் பௌணர்மி முழு நிலவு சபைக் கூட்டம் நடத்துவதன் நோக்கம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், குழந்தைகள், பெண்களிடம் உள்ள திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தன் சுத்தம் பேணுதல், சத்தான உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியாக முழு நிலவு சபைக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

சிறப்பு பயிற்சி மையக் குழந்தைகளின் பெற்றோர்கள், பொது மக்கள் பங்கேற்ற போட்டியில் 10 வகையான காய்கறிகளின் எடை அளவு, அதிலுள்ள சத்துக்கள் குறித்து பேராசிரியர் ஏ.அழகர் சாமி கேட்டறிந்தார். இதில், குழந்தைகளும், பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பதில் அளித்தனர். 

சரியான பதிலை தெரிவித்தவர்களுக்கு காய்கறிகள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட கள அலுவலர் பீஜீ அலெக்ஸ்இ சமூகப் பணியியல் துறை மாணவர்கள் முத்துபாண்டி, யாசர் அர்பத் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக களப் பணியாளர் ஏ.செண்பகவள்ளி நன்றி கூறினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...