உடுமலை அருகே இலவச மருத்துவ ஆலோசனை முகாம் - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

உடுமலை அடுத்த காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெரியகோட்டை ஊராட்சி காமராஜ் நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கராஜ் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஒன்றிய பொதுக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்ரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I. நெல்சன் முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தி.மு.க இளைஞர் அணியை சேர்ந்த சம்பத்குமார் செய்திருந்தார். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...