நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 29வது நாளாக தாராபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..!!

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 29-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தமிழர் முன்னணி இயக்கப் பொதுச் செயலாளர் இமயம் சரவணன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்த காணிக்கை கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகள் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரையின்படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர். இருப்பினும் தற்போது உள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 29 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்று 29-வது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகளுடன் தமிழர் முன்னணி இயக்க பொதுச்செயலாளர் இமயம் சரவணன் விவசாயிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...