நாட்டுக்கோழியில் கிடைக்கும் ஊட்டசத்துக்கள் பிராய்லர் கோழியிலும் கிடைக்கும் - கால்நடை மருத்துவ கல்லூரி தலைவர் தகவல்!

கோவை கொடிசியாவில், பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து, தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கு பின் பேசிய நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் நடராஜன், நாட்டுகோழியிலும் பிராய்லர் கோழியிலும் உள்ள ஊட்டச்சத்துகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை என கூறினார்.



கோவை: நாட்டுகோழியிலும் பிராய்லர் கோழியிலும் உள்ள ஊட்டச்சத்துகளில் எந்த வேறுபாடுகளும் இல்லை என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.



பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பின் சார்பாக நமது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு, பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து, தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று இரவு கோவை அவினாசி சாலை கொடிசியா பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, பிராய்லர் கோழிகள் குறித்தும் அது சார்ந்த பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவது குறித்தும், சிறப்புறையாற்றினார்.



மேலும், இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய, மருத்துவரும், பேராசிரியரும் மற்றும் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது,



பவுல்ட்ரி பார்மர்ஸ் ரெகுலேட்டரி கமிட்டி என்ற அமைப்பு கோவையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம், இவர்கள் தயாரிக்கும் இறைச்சி கோழிகள் சுகாதாரமானது. இக்கோழிகளில் இருந்து நமக்கு கிடைக்கும் சத்துக்கள் பாதுகாப்பானது மற்றும் சுகாதாரமானது என்பதை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இது சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னேடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து, இது ஒரு பாதுகாப்பான உணவுதான் என்பதை புரிய வைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றது.

மேலும் கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக ஊசிகள் செலுத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது முழுக்க முழுக்க ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

நமது குழந்தைகளுக்கு அம்மை நோய், போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் செலுத்துகின்றோமோ அதே போன்று தான் இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

மேலும் நாட்டுகோழிகளில் அதிக சத்துக்களும் பிராய்லர் கோழிகள் சத்து இல்லை என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது என்ற கேள்விக்கு, மனிதன் உருவாக்கியது தான் இந்த நாட்டு கோழி, நாட்டு கோழியின் வளர்ச்சி நீடித்த நாட்கள் என்பதால், மனிதர்களுக்கு தேவையான அளவை ஈடு கொடுக்க அதனை உற்பத்தி செய்வது கடினமான ஒன்று.

நாட்டுகோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் பிராய்லர் கோழியில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. நாட்டுகோழிகள் அதிக நாட்கள் வளரக் கூடியவை இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. வேறு எந்தவித சத்துக்களும் இல்லை. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது பண்ணை கோழிகள் விவசாயிகள் ஒழுங்குமுறை குழுவின் மேலான்மை ஆலோசகர் ராம்ஜி ராகவன் உடனிருந்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...