கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி!

பொதுமக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை பி.பி.ஜி. ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு வாரங்களாக அனுசரிக்கப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்தில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு அறிவுறுத்தலின் பேரில், கோவை சரவணம்பட்டி, பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி மற்றும் வடகோவை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மனித சங்கிலி நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மனித சங்கிலியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,



கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் கண் தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா பேசியதாவது, கண்களை தானம் செய்வதால், பார்வையற்ற பலரின் வாழ்வில் ஓளியேற்ற முடியும் என்ற நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெயஸ்ரீ, உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மனித சங்கிலியில் கலந்து கொண்ட பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் ‘உங்கள் கண்கள் வேறோருவரின் உலகமாக அமையட்டும்', ”கடவுளின் பரிசை ஏன் அழிக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அணி வகுத்து நின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...