சின்னதடாகம் அருகே செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடிய நபர் கைது!

சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய அஜீஸ் என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



கோவை: சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூகள் உள்ளன. சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற பிரப்பித்த உத்திரவு காரணமாக கடந்த 4 வருடங்களாக செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகில் உள்ள வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள MVN சேம்பர் என்ற செங்கல் சூளையில், நேற்று இரவு புகுந்த மர்ம நபர், அங்கு செயல்படாமல் இருந்த இயந்திரத்தில் இருந்து பழைய இரும்புகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தடாகம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பதும் இவர் அங்கிருந்த செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...