கோவை மாநகர மேயர் குடும்பத்தினர் மீது பெண் பரபரப்பு புகார் - அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டு.!!

கொடுத்த பணத்தை திரும்பி கேட்டதால், கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் பேசி வீட்டை காலி செய்ய வைக்க முயல்வதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.



கோவை: மாநகர மேயரின் குடும்பத்தினர், தங்களை தாகத வார்த்தைகளில் திட்டிவதாகவும், சிறுநீரை பிடித்துவந்து சமையலறையில் ஊற்றுவதாகவும் பாதிக்கப்பட்ட சரண்யா என்று குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா-கோபிநாத் தம்பதியினர். இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர், தங்களை வீட்டை காலி செய்ய வைக்க பல்வேறு விதங்களில் தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும் இதனால், தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வழி கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.



இது குறித்து சரண்யா கூறுகையில், தாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் தம்பி குமார். சில மாதங்களுக்கு முன்பு குமார், தங்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதில் 5000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பான ஆனந்த்குமார் மேயாராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என கூறினார்.

மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி இருக்கிறார். தான் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்வதாகவும், தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள், உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்வதாகவும், அருவறுக்கத்தக்க வகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து தங்கள் வீட்டின் சமையலறை பகுதியில் ஊற்றி செல்வதாகவும், அதுமட்டுமின்றி பூசணிக்காய், எலுமிச்சை பழம் இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்ற செயல்கள் செய்து வைத்து தொந்தரவு அளிப்பதாக கூறினார்.

தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும் கூறினார். இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் வீடியோ பதிவு செய்ததை அறிந்து குமார், சில ஆட்கள் கொண்டு மிரட்டுவதாக கூறினார்.

தங்களுக்கு உயிர்பாதுகாப்பு வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். குடியிருந்த ஆர்.எஸ்.புரம் அரசு குடியிருப்பில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாக தெரிகிறது எனவும் எனவே தான் அவர் மீண்டும் இங்கேயே வந்துவிட்டதாக சரண்யா கூறினார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...