பற்றி எரிந்த பனியன் ஏற்றுமதி நிறுவனம் - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், நேற்று மாலையில் தொழிலாளர்கள் பணி முடிந்து வெளியேறிய சிறிது நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது.



இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

பனியன் நிறுவனம் 3000 அடிக்கும் மேற்பட்ட சதுர அடியிலுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்டைந்தன.

தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...