உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், யானையை தொந்தரவு செய்யும் வகையில் ஹாரன் அடிப்பதோ, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுப்பதோ கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு செக்போஸ்ட் வரை சாலையில் இருபுறமும் அமராவதி - உடுமலை வனச்சரகங்களில், ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் உள்ளன.

உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடைகாலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும் மழைக்காலங்களில் வனப்பகுதியிலேயே குளம் குட்டைகளிலேயே தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலைகளை கடந்து செல்வது குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் தற்பொழுது மழை குறைவு காரணமாக வனப்பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல துவங்கி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஓன்று ஏழுமலையான் கோவில் பிரிவு பகுதியில் சாலையில் நின்று உள்ளது.

ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. ஹாரன் அடிக்கக்கூடாது, வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சிறிது நேரம் வாகனத்திலே காத்திருந்து யானை சென்ற பின் வாகனங்கள் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...