கன்னிவாடி சந்தையில் வரத்து குறைவு - ஆடுகளின் விலை கிடுகிடுவென உயர்வு

கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்து காணப்பட்டதால், இந்தவாரம், ஆடுகளின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து காணப்பட்டது. போதிய அளவில் தீனி இருப்பதால் ஆடுகளை விற்பனை செய்ய முன்வரவில்லை. இதன்காரணமாகவே ஆடுகளில் விலை உயர்ந்துள்ளது.


திருப்பூர்: கன்னிவாடி சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம், கிலோ ஒன்றுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

ஆடுகள் வரத்து குறைவு காரணமாக கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் கன்னிவாடி ஆட்டுச்சந்தையும் ஒன்று. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வரவில்லை.

எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த சில வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:- கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...