கோவையில் காவல் வனம் துவக்க விழா - மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்பு!

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல்துறை மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில் காவல் வனம் என்ற பெயரில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை துவக்கி வைத்தார்.



கோவை: கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவல் வனம் துவக்க விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

கோவை மாநகர ஆயுதப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில், காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும் விழா நடைபெற்றது.



கோவை மாநகர காவல்துறை மற்றும் சிறுதுளி என்ற தனியார் தன்னார்வ அமைப்பும் இணைந்து நடத்திய இவ்விழாவை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



இங்கு சுமார் 750 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, பல்வேறு வகையான 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது எனவும், இம்மரங்களை பராமரிக்க சிறுதுளி அமைப்பு உதவுகிறது.

ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் இருக்கின்ற நிலையில், அதோடு சேர்த்து இம்மரங்களும் சுற்றுபுற சூழலை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.

முதலமைச்சரின் ஆணையின் படி துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட உள்ளது. எனவே அக்காவல் நிலையங்களுக்கு கூடுதல் காவலர்களை கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யவும் போக்குவரத்தை சீர் படுத்துவதற்கும் இந்த இணைப்பு உதவியாக இருக்கும்.

மேலும் குற்றவாளிகள் மாநகரில் ஒரு இடத்தில் குற்றம் செய்து விட்டு பிற இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த இரு காவல் நிலையங்களும் மாநகர காவல்துறையுடன் இணைக்கப்படும் போது அது போன்ற சுழல் இருக்காது.

மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாற சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகள் பிற இடங்களிலும் விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...